மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

218 0

திருப்போரூர்:

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீட்டர் தூரத்துக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மெட்ரோ பணிகள்... சென்னையில் இந்த ஏரியாக்களில் 6 மாதம் போக்குவரத்து மாற்றம்  | Indian Express Tamil

தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கந்தன் சாவடி முதல் கண்ணகி நகர் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றன.

இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணகி நகர் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

5 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒரு மணிநேரம் வரை ஆனது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘மெட்ரோ ரெயில் பணியால் ஓ.எம்.ஆர். சாலையில் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதே கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Post

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது

Posted by - December 20, 2025 0
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

Posted by - September 21, 2023 0
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9-ந்தேதி திடீரென அவரது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *