“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

133 0

தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார்.

தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை பகுதியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார். அதில், தனது அரசியல் எதிரி யார் என குறித்தும் அவர் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது; “இந்த ஊழல் இருக்கிறதே. அது எங்கு எப்படி ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமே இருக்காது. முகமூடி தான் இருக்கும்.

முகமூடி அணிந்த ஊழல் கபடதாரிகள் தான் நம்முடன் இருந்து நம்மை ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். நமது ஒரு எதிரி பிளவுவாத அரசியல் மற்றொரு எதிரி இந்த ஊழல் கபடதாரிகள்.

நம் மக்களுக்கு இங்கு நல்லாவே தெரியும் யார் இங்கு வரவேண்டும். யார் வரக்கூடாது. இங்கு சாதி இருக்கும்; அது சமூகநீதிக்கான அளவுகோளாக மட்டுமாகவே இருக்கும். அதைவைத்து நம் மண்ணை வேறு மாதிரி மாற்ற வேண்டும் என நினைத்தாலும், அது நம் மக்களே ஏற்கமாட்டார்கள்.

மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல். மக்களோடு மக்களாக அவர்களோடு ஒருவனாக எப்போது மாறாமல் மக்களுடன் நிற்பதுதான் எங்களின் அரசியல்.தேர்வு முடிந்ததும் ரிசல்ட் வருவதுபோல், நல்ல ரிசல்ட் கொடுக்கக்கூடிய திட்டம் வகுக்க வேண்டும். அது அமல்படுத்த வேண்டும், அது மக்களிடம் போய் சேருகிறதா என பார்க்க வேண்டும். சோறு சாப்பிட்டால்தான் பசி ஆறும், சோறு என்று சொன்னாலே பசி ஆறாது.மீன் பிடித்து கொடுக்கக்கூடாது அது தவறு மீன் பிடிக்க கத்துக்கொடுக்க வேண்டும் அதுதான் சரி என சிலர் சொல்லிக்கொண்டு சுத்துவார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. எங்களின் கான்சப்டே வேறு மிகவும் நடைமுறை வழி. முடிஞ்சவங்க மீன் பிடிக்க கத்துக்கொண்டு வாழட்டும். முடியாதவர்களுக்கு நாம் மீன் பிடித்துக்கொடுத்து வாழ வைப்போம்.

எங்களை பொறுத்தவரையில் மக்களுக்கு நல்லது என்றால் எதுவுமே தவறு கிடையாது. எங்கள் இலக்குகளை எங்களின் வழிகளை தீர்மானிக்கின்றன. மாற்று அரசியல் மாற்று சக்தி எனும் ஏமாற்றும் வேளையெல்லாம் நாம் எப்போதும் செய்யபோவதில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன்.

இந்தக் கூட்டம் குடும்பமாக சேர்ந்தோ, கூட்டணி சேர்ந்தோ ஏமாற்றவோ கொள்ளையடிக்க வந்த கூட்டமோ அல்ல. இது ஏதோ சோஷியல் மீடியாவில் கம்பு சுத்த வந்த கூட்டம் அல்ல. சமூகத்திற்காக வால் ஏற்றி நிற்கபோகும் கூட்டம்.

இங்கு ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் மீது ஒரு கலரை பூசிவிட்டு, இவர்கள் மட்டும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை எல்லாம் விட்டுக்கொண்டு, இவர்களுக்கு எப்போது பார்த்தாலும், ஃபாசிசம்தான்.

ஒற்றுமையாக இருக்கும் நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என ஒரு சீன் போட்டுக்கொண்டு. அவங்க ஃபாசிசம் என்றால், நீங்க என்ன பாயாசமா? நீங்களும் அவர்களுக்கு கொஞ்சம் கூட சலிக்காதவர்கள்.மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். எனவே இனி உங்களை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் என்ன வண்ணம் பூசினாலும் எதுவும் நடக்கப்போதில்லை. நாங்கள் இப்போதும் சொல்கிறோம். எங்களின் தவெகவிற்கு நாங்கள் முடிவு செய்துள்ள இந்த நிறத்தை தவிர வேறு நிறத்தையும் பூச முடியாது.பிளவுவாத அரசியல் செய்பவர்களே தவெகவின் ஒரே முழு முதல் கொள்கை எதிரி. அடுத்த திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பெரியாரையும், அண்ணாவின் பெயரையும் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நமது அடுத்த அரசியல் எதிரி” என்று பேசினார்.

Related Post

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..

Posted by - December 9, 2024 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது திமுகவினர்…

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted by - December 5, 2023 0
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி…

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது நல்லது- தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Posted by - September 15, 2023 0
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *