“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

145 0

திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது அரசியல் குறிக்கோள் எனவும் விஜய் தெரிவித்தார்.

திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று கொள்கை விளக்க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தவெக முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏன் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின்கொள்கைகள் குறித்து விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கொள்கை கோட்பாட்டு அளவில் நாம் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம பிரிச்சு பார்க்கப் போறது இல்ல. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பதுதான் நம்முடைய தாழ்மையான கருத்து. அதனால் நாம் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ்நாட்டு உரிமைகள் சார்ந்த, இந்த மண்ணுக்கான மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை நம்முடைய கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போறோம்” என்று தெரிவித்தார்

முன்னதாக பேசிய விஜய், பெரியார் எங்கள் கொள்கை தலைவர். கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அண்ணா சொன்ன மாதிரி – ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களது நிலைப்பாடும்.ஆனாலும், பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை பெரியாரின் இவை அனைத்தையும் முன்னெடுக்கபோகிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது அரசியல் குறிக்கோள் எனவும் விஜய் தெரிவித்தார்.பெரியாரை அடுத்து எங்கள் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர், அவர் இந்த மண்ணில் மதசார்ப்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்கும் அவரை எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம்.இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையும் நிலைநிறுத்தபோராடும் மாபெரும் தலைவரான அவரையும் எங்கள் கொள்கை தலைவராக சொல்வதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

Related Post

பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

Posted by - May 24, 2025 0
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக…

”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Posted by - March 20, 2023 0
தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி…

இரணியல் அருகே 3 ஆண்டுகளாக 3 மகன்களை வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்

Posted by - March 31, 2023 0
திங்கள்சந்தை : இரணியல் அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பெல்சி நேற்று காலையில் ஊராட்சி அலுவலக ஊழியருடன் கானாங்குளத்தங்கரை பகுதியில் வரி வசூல் செய்ய…

சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்

Posted by - December 5, 2023 0
சென்னை: மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை)…

தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted by - November 8, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *