“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

165 0

அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்.

“இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை கையில் பிடித்து விளையாடும் குழந்தை நான்” என்றும் தவெக மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் எந்தவொரு குறிப்பு பேப்பர் இல்லாமல் எளிய நடையில் பேசியது கவனம் பெற்றுள்ளது.

வழக்கமாக அரசியல்வாதிகள் மேடையில் இருப்போரை வரவேற்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் இதனை தவிர்த்து, நேரடியாக மக்கள் பேசும் யதார்த்த மொழியில் பேசியது வரவேற்பை பெற்றது. முதன்முறையாக அரசியல் மேடையில் மைக்கை பிடித்த விஜய் பேசியதாவது:-

ஒரு குழந்தை முதன்முதலாக அம்மான்னு சொல்றப்ப அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க… அந்த சிலிர்ப்பு எப்படி இருந்துச்சுன்னு அந்த அம்மா கிட்ட கேட்டா அவங்களால தெளிவாக விளக்கி சொல்ல முடியும். ஆனா அந்த உணர்வு எப்படி இருந்துச்சுன்னு குழந்தை கிட்ட கேட்டா அந்த குழந்தைக்கு எப்படி சொல்ல தெரியும்?

குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயோட வெள்ளந்தியாக சிரிக்க மட்டும் தானே தெரியும். அந்த குழந்தை உணர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளால் சொல்ல தெரியாது. அப்படி ஒரு உணர்வோட தான் இப்ப நான் உங்க முன்னாடி நிற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அம்மா கிட்ட கூட தன்னோட உணர்வை சொல்ல முடியாத குழந்தைக்கு முன்னாடி ஒரு பாம்பு வந்து படம் எடுக்குதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? யார் முன்னாடி பாம்பு வந்து நின்னாலும் அலறி அடிச்சு ஓடுவாங்க….‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்று ஒரு பழமொழி இருக்கு. ஆனா அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட, கொஞ்சம் கூட அலட்டிக்காம அந்த பாம்பையும் சிரிச்சுக்கிட்டே தன்னுடைய கையில புடிச்சு விளையாட ஆரம்பிக்கும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இருக்காதா என்ற கேள்வியும் வரும். பாச உணர்வையே சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பயம்னா மட்டும் எப்படி சொல்ல தெரியும்? இங்கு அந்த பாம்புதான் அரசியல். அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்” என்று விஜய் பேசினார்.மேலும் அரசியல் ஒரு போர்க்களத்தில் தொண்டர்கள் கவனமாக களமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முன்னதாக மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார்.

Related Post

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

Posted by - August 14, 2023 0
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

மத்திய அரசின் தயவில் ஆட்சி நடத்தும் திமுக அரசு… ஊழலில் திளைக்கும் தமிழக அமைச்சர்கள் ; அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு..!!

Posted by - December 19, 2023 0
விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் 122…

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Posted by - December 31, 2025 0
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *