கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

131 0

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்து நடத்தி வந்தவர் லோகேஸ்வரி. இவர், அவசர தேவைக்காக பாண்டி என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தனது பெயரில் உள்ள கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள்வாடகைக்கு விட்டு, அதற்குரிய வாடகை தொகையை கடன் வாங்கிய பாண்டியிடம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்படி உள்வாடகை எடுத்த லோகேஸ்வரியின் கடையில் ஆறுமுகம் பலகார கடை வைத்துள்ளார்.அதேபோல், மாதம் வாடகை தொகையை பாண்டியிடம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதுதான் லோகேஸ்வரி வாங்கிய கடன் தொகையின் முழு அசலை கட்ட சொல்லி பாண்டிக்கு ஆறுமுகம் அழுத்தம் கொடுத்துள்ளார்.

தான் ஏன் கடனை அடைக்க வேண்டும். தன்னுடைய கடை ஓனர் வாங்கிய கடனுக்கு அவரையே அணுகும் என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி, தனது உறவினரான திருமங்கலம் 1வது வார்டு கவுன்சிலர் காசி பாண்டியின் உதவியை நாடியுள்ளார்.

உடனே கவுன்சிலர் காசி பாண்டி, ஆறுமுகத்தின் கடைக்கு சென்று பணம் கேட்டுள்ளார். “நகராட்சி கட்டிடத்தில் கடை வைத்து நடத்துகிறாய் உடனே கடையை காலி செய்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் பலகார தட்டுகளை தூக்கி வீசி எறிந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.உடனே அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து திமுக கவுன்சிலர் பாண்டியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அப்பாவி நபரின் பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் மதுரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

விஜய்க்கு போன் போட்ட அஜித்.. ஆடிப் போன வெற்றி கழகம்

Posted by - August 27, 2024 0
விஜய் இடம் போனில் பேசிய அஜித் மேலும் உங்களின் அடுத்தடுத்த நகர்வை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதோடு 2026 தேர்தலில் வெற்றி உங்களுக்கு தான் என்று…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *