தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

138 0

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்றும்,  அவ்வாறு எந்த அழுத்தமும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு தானோ, விடுதலை சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை என்றும், விழாவில் பங்கேற்காததற்கு விஜய் காரணமில்லை என்றும் அவர் கூறினார்.

விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை என்றும் அதேவேளையில் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பதாகவும்  திருமாவளவன் தெரிவித்தார்.

Related Post

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது…

Posted by - February 21, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *