விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

124 0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாக அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் கட்சி நாம் தமிழர்.

விஜய்யை விளாசும் சீமான்:

திராவிட கோட்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து, கடந்த 15 ஆண்டுகளில் தனது வாக்கு வங்கியை 8 சதவீதத்திற்கும் மேலாக உருவாக்கியுள்ளார். அடுத்தாண்டு நடக்க இருக்கும் தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் நடிகர் விஜய்.

ஆளுங்கட்சியான திமுக-விற்கு தானே போட்டி என்று விஜய் ஒவ்வொரு மேடையிலும் கூறி வரும் சூழலில், விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று கூறிய பிறகு தனது ஒவ்வொரு மேடையிலும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்யின் டிவிகே-வை டி விற்க, தளபதியை தலைவிதி, விஜய் ரசிகர்களை அணில் குஞ்சுகள் என்று மிக மோசமாக மேடையில் விஜய் விமர்சித்து வருகிறார்.

ரஜினியை புகழும் சீமான்:

திராவிட கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்து குறிப்பாக, திமுக-வை விமர்சித்து தனது அரசியல் பயணத்தை கொண்டு சென்று வரும் சீமான் சமீபகாலமாக விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது கடந்த கால அரசியலில் மிக கடுமையாக விமர்சித்து வந்த ரஜினிகாந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்று நேரில் சந்தித்தார்.

திருச்சியில் விஜய்யைப் பார்க்க வந்த கூட்டம் தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கிய நிலையில்,விஜய்க்கு வந்த கூட்டத்தை காட்டிலும் ரஜினிகாந்திற்கும், அஜித்திற்கும் அதிக கூட்டம் வரும் என்று சீமான் விமர்சித்தார். தமிழ்நாட்டில் பொதுமேடையில் ரஜினிகாந்தை மிக கடுமையாக விமர்சித்தவர் சீமான். ஆனால், விஜய்யை எதிர்ப்பதற்காக ரஜினியையும், அஜித்தையும் அவர் புகழ்ந்து பேசியிருப்பதை விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சீமான் ஆதரவாளர்கள் அதிருப்தி:

திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், திமுக-விற்கு எதிராகவும் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் சீமான் விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு திமுக, அதிமுக மீதான விமர்சனத்தை குறைத்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது, ரஜினி, அஜித்தை புகழ்வது சீமான் ஆதரவாளர்கள் மத்தியிலே சற்று அதிருப்தியை உண்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து விஜய்யை மட்டும் அதிகளவில் விமர்சித்து வருவது சீமானுக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். சீமான் தொடர்ந்து இதேபோன்று விமர்சித்து வந்தால் அவரது வாக்கு வங்கி சதவீதம் மிக கடுமையாக சரியும் என்று அரசியல் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

சமீபகாலமாக இணையத்தில் தவெக தொண்டர்களுக்கும், நாம் தமிழர் தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் போக்கு நிலவி வருகிறது.

Related Post

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - September 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

Posted by - October 8, 2025 0
விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *