ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?

187 0

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக, விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆதவ் அர்ஜூனா தவெகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு துணை பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கிய பேச்சு

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

தவறான முன்மாதிரியாகி விடும் சூழல்

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தவெகவுடன் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கம் காட்டி வரும் ஆதவ் அர்ஜூனா, அக்கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. தவெகவில் தனக்கு பொருளாளர் அல்லது துணைத் தலைவர் என ஏதாவது முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக  வெற்றிக் கழகத்திற்காக பணியாற்றத் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Related Post

பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

Posted by - March 16, 2026 0
TVK Alliance : பாஜக, அஇஅதிமுக, சசிகலா, ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என…

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *