இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பரிசு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என 3 வகையாக பிரித்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுதம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்களை ரூ.499/- விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
பெரும் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, கூட்டுறவுப்பு, துவரம் பருப்பு, உளுதம் பருப்பு, கடலை பருப்பு, புளி, தனியா, சோம்பு, ஏளக்காய் உள்ளிட்ட 35 பொருட்கள் ரூ.999/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.