Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் வெளியிடுகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு மீடியாவிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து பேச சென்னை செல்கிறேன் என்று பேட்டியளித்து இருந்தார்.அதன்படி நேற்று அவர் சென்னை வந்துள்ளார், காலை முதல் அவர் சென்னையில் உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Post
வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று முடிந்த…
சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…
சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக…
கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019…
விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (258)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

- ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

- பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

- முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?
