”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

173 0

இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியாதைக்கும் பின் பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார்.இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், ”இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்திற்கு மரியாதை கிடைக்காத இடத்தில் உறுப்பினராக இருக்க கூடாது என்பதற்காகவே ஆளுநர் வெளியேறினார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு பதலளித்த பேரவை முன்னவர் துரைமுருகன், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து ஏற்கனவே ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவை மரபின் படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது பின்பற்றப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும்..

சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறிய சம்பவம் குறித்து பேசியிருக்கும் தவெக தலைவர் விஜய், சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளே விவாதிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர் தமிழக சட்டப்பேரவையின் மரபை காக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

Related Post

தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம்

Posted by - April 14, 2023 0
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்று  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Posted by - March 16, 2023 0
இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும்…

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

Posted by - February 13, 2024 0
இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…! மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை…

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *