‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

119 0

காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி மாணவர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீ (Tee) யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலியை திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் வீட்டிலேயே பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். ஜெயசூர்யாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற கல்லூரி மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் உறவு முறையில் இருவரும் அண்ணன் தங்கை என்ற நிலையில் இதனை ஜெயசூர்யா குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் ஜெயசூர்யா ரம்யா உடனான காதலை கைவிட நினைத்து பேசுவதை நிறுத்தி, அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா காதலை கைவிட மனமில்லாமல் கைகளை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டும் புகைப்படங்களை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வது என மிரட்டியுள்ளார்.
இருப்பினும் ஜெயசூர்யா தொடர்ந்து பிடிவாதமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி மாலை ஜெயசூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஜெயசூர்யா மட்டும் தனியாக வீட்டின் மீது உள்ள அறையில் இருந்துள்ளார். அப்போது தேநீர் போட்டு தருகிறேன் என கூறிய ரம்யா டீ யில்  எலி பேஸ்ட்டை கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்துள்ளார். இதனை அறியாத ஜெயசூர்யா தேநீரை குடித்துள்ளார். பின்னர் இரவு ஒன்பதரை மணியளவில் ரம்யா வாட்ஸ்ப் (whatsapp) மூலமாக ஜெயசூர்யாவிடம் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என கேட்டுள்ளார்.
இதற்கு ஜெயசூர்யா ஆமாம் என கூறியுள்ளார். அப்போதுதான் நான் டீ யில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்தேன் என ரம்யா கூறியுள்ளார். இருப்பினும் இதனை ஜெயசூர்யா நம்பாத நிலையில் இரவு 11 மணி அளவில் ஜெயசூர்யாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நண்பர்கள் இருவர் ஜெயசூர்யாவை அருகில் மடப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஜெயசூர்யாவின் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயசூர்யாவின் ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயசூர்யா ரம்யாவை காட்டிக் கொடுக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக கூறிவந்த நிலையில் ஜெயசூர்யாவின் தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் ரம்யா உடன் வாட்ஸப்பில் பேசியதை கண்ட ஜெயசூர்யாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வர இருக்கின்றனர். இந்நிலையில் காதலனை டீயில் எலி பேஸ்ட் கலந்து கொலை செய்ய முயன்ற ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.
குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த ரம்யாவை கைது செய்யகோரி ஜெயசூர்யாவின் தந்தை ஏழுமலை திருவெண்னைய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கில் ரம்யாவை கைது செய்து சிறையிலடைத்தனர். ரம்யா ஜெயசூர்யாவுக்கு, தேநீரில் எலிபெஸ்ட் கலந்து கொடுத்து தொடர்பாக ஒரு மாதத்திற்கு பிறகு வாட்ஸ்ப்பில் பேசியதை ஆதாரமாக கொண்டும்  காவல்துறையினர் ரம்யா கைது செய்துள்ளனர்.

Related Post

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - December 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *