எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் – புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்

95 0

நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுவதாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்காக எடப்பாடி அவசரகதியில் திட்டங்களை அறிவித்ததாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி மீது அட்டாக்:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல’ என்று எம்.ஜி.ஆர் பாடிய பாடல் வரிகள் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாகப் பொருந்தும். நாளொரு நாளும் பொழுதொரு நேரமும் ’அறிக்கை அரசியல்’ நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. ’நான் ஒரு விவசாயி’ என பழனிசாமி நாவில் ஒன்று சொல்லுவார். ஆனால், நினைவில் அதற்கு மாறாக இருப்பார். அதன் பேர் உள்ளமல்ல. ’நான் ஒரு விவசாயி’ என்ற பழனிசாமியின் பழைய பம்மாத்துகள் கலைந்து நிற்பதால், அதை நிலைநிறுத்த அவர் போடும் கோமாளி வேடங்கள் எடுபடவே இல்லை.

”முகத்திரை கிழிப்பு”

ஈரோடு மாவட்டத்தில் அரசு விவசாயக் கண்காட்சி விழாவில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருவதை பட்டியல் போட்டுச் சொன்னார். அதனைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. ’’நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்’’ என்ற காமெடியைப் போல ’’நான்தான் உண்மையான விவசாயி’’ எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி பழனிசாமியின் முகத்திரையை  முதலமைச்சர் ஈரோட்டில் வைத்துக் கிழித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

”தேர்தலுக்கான திட்டங்கள்”

தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவைத் துவக்கி வைத்தது பற்றி பழனிசாமி பெருமை அடிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஓட்டுக்காக அவசர அவசரமாகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தர் பழனிசாமி.  முதலமைச்சரின் உதவி மையம், காவிரி – வைகை – குண்டாறு இடையே நதிகள் இணைப்புத் திட்டம் அடிக்கல், மினி கிளினிக், வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிப்பு, ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதம் முன்பு பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் தேர்தல் காலப் புஸ்வாணங்கள்.

திமுக நிறைவேற்றிய திட்டம்:

அந்த வரிசையில்தான் தலைவாசலில் கால்நடைப் பூங்காவை உருவாக்கினார். அது நிறைவடையும் முன்பே அதில் ஒரு பகுதியை 22.2.2021 அன்று திறந்து வைத்தார் பழனிசாமி. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான (பிப்ரவரி 26) நாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பு அந்தத் திட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தார். தான் கொண்டு வந்த திட்டம் எனத் தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, அந்தத் திட்டத்தை திமுக தடுத்துவிட்டது எனவும் சொல்கிறார். இந்த முரண்பாடுதான் பச்சைப்பொய் பழனிசாமியை அம்பலப்படுத்துகிறது. திட்டத்தை பழனிசாமி அரசு நிறைவேறியிருந்தால் ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்த போகிறது?

நீர் ஆதாரமே இல்லாத ஓர் இடத்தில் கால்நடைப்பூங்காவை அமைக்கும் முடிவைக் கடந்த 2019-ல் அறிவித்து, 2 ஆண்டுகள் ஆகியும் 50 சதவீதப் பணிகளைக்கூட முடிக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றார் பழனிசாமி. .ஆனால், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் நீர் ஆதாரச் சவால்களையெல்லாம் சமாளித்து, உயர்மின் அழுத்த வேலிகள் அமைப்பது உள்ளிட்ட மீதமுள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடித்து தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். விவசாயிகள் நலனுக்காகத் தனி விவசாய பட்ஜெட்டையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட அரசு, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை.

”போலி விவசாயி”

’நான் ஒரு விவசாயி’ எனச் சொல்லி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் பழனிசாமி பாணி. விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி. உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். உழவுத் தொழிலையும், உழவர்களையும் அழித்துப் பெரு முதலாளிகள் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்த பச்சை துரோகிதான் பழனிசாமி.

நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். மனதில் அழுக்கை வைத்துள்ள பழனிசாமி, என்றென்றைக்கும் உலகிற்கே உயிரூட்டும் உழவர் ஆகிவிட முடியாது. போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டின் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்” என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Post

விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - December 10, 2024 0
இதக்கூட கவனிக்க மாட்டிங்களா என்று உளவுத்துறை தலைமையை அழைத்த ஸ்டாலின் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் விவகாரத்தை…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…

அடுத்த 10 நாட்களுக்கு: மழைக்கான வாய்ப்பு குறைவு

Posted by - November 24, 2022 0
காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில்…

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததது ஏன்? – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Posted by - March 17, 2025 0
சட்டப்பேரவை தலைவர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலை தவறிவிட்டதாகவும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். “அதிமுகவில்…

சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - September 7, 2023 0
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *