திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

82 0

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார்.செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை.அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும். தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இதன் தொடர்ச்​சி​யாக காங்​கிரஸார் சமூக வலைதள பதிவு​களில், “2014 மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து களம் கண்ட காங்​கிரஸ் கட்​சி​யின் வாக்கு சதவீதம் 4.37. அதே​நேரத்​தில் மக்​கள் நல கூட்​டணி என்ற பெயரில் விசிக​வின் வாக்கு சதவீதம் 0.77. யார் வலிமை என்று இப்​போது புரி​கிற​தா. வன்​னியரசின் இந்த பேச்சை முதலிலேயே கட்​சித் தலை​வர் தடுத்து நிறுத்த வேண்​டும்” என கண்​டனக் குரல்​களை எழுப்பி வரு​கின்​றனர்.

விசிக​வில் இருந்து கருத்து வேறு​பாட்​டால் வெளி​யேறிய செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் தலை​வ​ரான பிறகே திரு​மாவளவனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “2024 மக்​கள​வைத் தேர்​தலில் திரு​மாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்​கிரஸ் தொண்​டர்கள உழைப்​பார்​கள்” என தெரி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே கட்​சி​யில் இருந்​து, காங்​கிரஸ் கட்​சிக்கு தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை வந்​த​தில் எவ்​வித சங்​கட​மும் இல்லை என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மாரும் தெரி​வித்​திருந்​தார்.

இவ்​வாறு இரு தரப்​பினரும் இணக்​க​மாகி ஓராண்டே ஆன நிலை​யில், தற்​போது வெடித்​துள்ள மோதல் எங்கு வரை செல்​லும் என்​பதை பொறுத்​திருந்தே பார்க்​க வேண்​டும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கூறுகின்​றனர்​.

Related Post

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - June 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

ஐயாவின் புது ரூட்டு!மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்!

Posted by - July 12, 2025 0
அன்புமணியுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதியை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான கட்சியாக பாமக…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

“பா.ஜ.கவுக்கும் எனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” – பிரதமர் மோடி

Posted by - March 19, 2024 0
பிரதமர் மோடி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு…

பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Posted by - April 11, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *