பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

189 0

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் அதிக படம் கதாநாயகியாக நடித்த நாயகி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 87 வயதான இவர் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

பெரும் சோகம்:

அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்  தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் இவரை கன்னடத்து பைங்கிளி என்று அன்புடன் அழைப்பார்கள்.

 

பெங்களூரில் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை காவல்துறை அதிகாரி. குடும்பத்தில் நான்காவது மகளாக பிறந்த இவர் சிறுவயது முதலே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

வெற்றி மேல் வெற்றி:

1955ம் ஆண்டு இவர் முதன்முதலில் கன்னட திரைப்படமான மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய இவர் பிரபலமானார். பின்னர், 1957ம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன்பின்பு, இவர் மானமுள்ள மருதம் என்ற படத்தில் நடித்தார். இவரது திறமையை கண்ட எம்ஜிஆர் இவரை தனது மிகப்பெரிய பொருட்செலவில் உருவான நாடோடி மன்னன் படத்தில் கதாநாகியாக ஒப்பந்தம் செய்தார்.

அதன்பின்பு, சரோஜாதேவியை தமிழ் திரையுலகில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி என அப்போது தமிழ் சினிமாவை கட்டியாண்ட கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். நாடோடி மன்னன், சபாஷ் மீனா, கைராசி, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, பார்த்தால் பசிதீரும், ஆலயமணி, தாயை காத்த தனயன், பெரிய இடத்து பெண், அன்பே வா, புதிய பறவை என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி மேல் வெற்றி பெற்றது. 120க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ளார்.

ஆதவன்தான் கடைசி:

பின்னர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.  180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி தமிழில் கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

விருதுகள்:

இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷண் விருது, பத்மஸ்ரீ விருது வாங்கி அசத்தியுள்ளார். கலைமாமணி விருது, என்டிஆர் தேசிய விருது, ராஜ்யோத்சவா விருது என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக அரசின் விருதுகளையும் அவர் வென்றுள்ளார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

Related Post

மனைவியை பயமுறுத்த தற்கொலை Prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Posted by - April 25, 2023 0
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான…

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

Posted by - January 15, 2025 0
பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக…

‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

Posted by - January 28, 2023 0
அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த…

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023 0
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக…

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *