வாழ்க தமிழ்நாடு…பாரதியார் பாட்டு…சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

208 0

வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார்.

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் தமிழ்நாடு குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவர் சட்டமன்றம் வந்ததும் தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். எனினும் உரையைத் தொடங்கிய ஆளுநர், ‘முதல் கூட்டத்தில் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சி. என் இனிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அரசின் கொள்கை விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக 40 நிமிடங்கள் வரை உரையாற்றினார். இறுதியாக  ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி உரையை நிறைவு செய்தார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Related Post

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…

அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

Posted by - December 11, 2025 0
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *