துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

248 0

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்

துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாதையாத்திரை செல்வது என வித்தியாசமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஒரிஜினல் பணம் நோட்டு போல் டிக்கெட்ட அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனம் முடிவெடுத்துள்ளன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த ட்வீட்டில் ”துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். துணிவு குறித்து கருணாநிதி பதிவிட்டுள்ளதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் பெரிய புரமோஷன்கள் இல்லாமலே வெளியாகின. ஆனால் துபாயில் வானத்தில் போஸ்டர் பறக்கவிடப்பட்டது என இந்த முறை புரமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர் துணிவு படக்குழு. காரணம் வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் எனக் கூறப்படுகிறது.

Related Post

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

Posted by - November 30, 2023 0
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம். தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு…

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - February 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - February 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *