லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

75 0

அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு அடுத்தடுத்து அழுத்தங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் திமுக சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் கண்டன குரல் எழுப்பிய திமுகவிற்கு, சிவகங்கையில் நடந்த அஜித்குமார் மரண வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்:

காவல்துறையினரின் செயல்பாடுகள் பாெதுமக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி வரும் நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி நேற்று அளித்த பேட்டி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வதம், ஐஜி செந்தில்வேல் தூண்டுதலால் தனக்கு மனரீதியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தாெல்லை தருவதாக நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தூக்கில் தொங்க தயார்:

மேலும், நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்ததாகவும், ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், லஞ்சம் வாங்கியதாக போலி புகார் கூறுகின்றனர் என்றும், லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயார் என்று மிகவும் மன வேதனையுடன் பேட்டி அளித்தார். காவல்துறை வரலாற்றில் ஒரு காவல்துறை அதிகாரி தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஆதங்கத்துடன் பேட்டி அளிப்பது தமிழக வரலாற்றில் மிக மிக அரிதான ஒன்றாகும்.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்கு இது பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதா?

ஏனென்றால், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேன் இந்த அரசுக்கு உயர் அதிகாரிகளே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து காவல்துறையில் இதுபோன்று குற்றச்சம்பவங்களும், மன ரீதியான இன்னல்களும், புகார்களும் உண்டாகி வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

காவல்துறை உள்ளடங்கிய சட்டம் ஒழுங்கு துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழுமையான கட்டுப்பாட்டில் காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்வியையும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி விவகாரத்தில் அந்த மாவட்ட காவ்ல் கண்காணிப்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேன் போல தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காவல்துறையினர் உயர் அதிகாரிகளால் குமுறிக் கொண்டு இருப்பதாகவும் காவல்துறையினர் மத்தியில் ஆதங்க குரல்களும் வெளிப்படுகிறது.

தீர்வு காண்பாரா?

தேர்தல் நெருங்கும் சமயத்தில் காவல்துறையில் நடக்கும் இதுபோன்ற புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

Posted by - December 25, 2024 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்…

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

சோனமுத்தா போச்சா.?!! முக்குலத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?

Posted by - April 14, 2025 0
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால், சட்டமன்ற தேர்தலின்போது, தென் மாவட்டங்களில் முக்கியமாக கருதப்படும் முக்குலத்தோர் வாக்குளை அதிமுக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து…

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

Posted by - December 31, 2022 0
தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு செங்கல்பட்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால்…

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - April 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *