சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

207 0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஸ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி ஆகியோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்தனர். ஜல்லிக்கட்டில் முக்கிய பிரமுகர்களின் வளர்ப்புக் காளைகளும் களமாடி வருகின்றன.

அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளில் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அலங்காநல்லூரிலும் களமிறங்கி வெற்றிபெற்றது. இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றிபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் காளை களமிறங்கிய நிலையில், யாருக்கும் பிடிகொடுக்காமல் வெற்றிபெற்றது.

நடிகர் சூரியின் சார்பில் 2 மாடுகள் களமிறங்கின. 3வது சுற்றில் களமிறங்கிய சூரியின் காளை பிடிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய காளை வெற்றிபெற்றது. 4 வது சுற்றில் களமிறங்கிய தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காளை வெற்றி பெற்றது. இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வெற்றிபெற்றது.

Related Post

பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”

Posted by - September 20, 2023 0
அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - September 8, 2023 0
நடிகர் மாரிமுத்து #actormarimuthu #ethirneechal #tamilserial #suntv #rip #jailer சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

பெண் காவலரிடம் அத்துமீறல்.. திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைது; கட்சியிலிருந்து இடைநீக்கம்!

Posted by - January 4, 2023 0
பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *