“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

149 0

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி திளைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

முதல்வரை தாக்கி பேசிய விஜய்:

தமிழ் வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது சென்னையை அடுத்த மாமல்லப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய், அரசையும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் காட்டமாக பேசியிருந்தார். குறிப்பாக முதல்வரை குறித்து அவர் பேசுகையில் அரசியல் செய்ய விருப்பமில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடி சொல்லும் முதலமைச்சர், நம்மை குறித்து பல அவதூறுகளைப் பரப்பும் முதலமைச்சர்” என்று சாடினார்.

பெருந்தன்மையை பேரளவில் பேசும் முதல்வர், சட்டமன்றத்தில் நமக்கு எதிராகப் பேசிய எவ்வளவு வன்மத்தைக் கக்கி இருக்கிறார் என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமல் இருக்க மாட்டார்கள்”

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், நேர்மை திறனற்று குற்றம் சாட்டிய குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு, உச்ச நீதிமன்றத்தின் 13-10-25 விவாதங்கள் மற்றும் உத்தரவுகளை வைத்து சில கேள்விகளை முன்வைத்தார். “பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் அழித்துவிட்ட முதல்வருக்கும், திமுக சார்பாகக் கோடிகளைக் கொட்டி அறிவார்ந்த வழக்கறிஞர்கள் கபட நாடக திமுகவின் தில்லு தாங்கிப் பிடிக்க முடியாமல் உச்சநீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வர் அவர்களுக்கு மறந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்

வைகோ அறிக்கை:

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய த.வெ.க. தலைவர் விஜய் தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

குற்ற உணர்ச்சி இல்லை:

நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும்.பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும் கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.

நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும்

அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

#Vaiko #Slams #TVK #Vijay

Related Post

வைகோவை அட்டாக் செய்த மாணிக்கம் தாகூர்.. சிக்கலில் திமுக கூட்டணி!

Posted by - February 20, 2026 0
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் மிக கடுமையாக பேசி வருகிறார். அவரின் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை உண்டாக்குவது போல இருக்கிறது என வைகோ தெரிவித்ததற்கு மாணிக்கம்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *