முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

146 0

முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் எடப்பாடி பழனிசாமி. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதன் டீசர் வெளியாகியுள்ளது. அதில் அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அரசியல் குறித்தும் பேசியுள்ளார்.  அந்த டீசரில் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும், விடைகளும் கீழ் வருமாறு:

கேள்வி: உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?

பதில்: எனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

கேள்வி: அவர்களைப் பார்த்த முதல் தருணம் எப்படி இருந்தது?

பதில்: ஒரே பெண்ணைத்தான் பார்த்தேன். அவர்களையே திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னுடன் ஒத்துப்போனார். குடும்பத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஏதாவது பேசி பிரச்சினையை உண்டாக்கிவிட வேண்டாம்.

கேள்வி: விவசாயம் மீது உங்களுக்கு அவ்வளவு ஆசையா?

பதில்: செடி வாடிப்போயிருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அந்த செடி வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் விவசாயிகள். அது வாடிப்போன வாழ்க்கை முடிஞ்சு போச்சு. என் தாத்தா, அப்பா, அம்மா எல்லாம் விவசாயம். நானும் விவசாயி. விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, விவசாயப் பணியும் செய்து கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய பணி விவசாயம்தான். தொழில் விவசாயம்தான்.

கேள்வி: உங்களுக்கு பிடித்த படம் எது?

பதில்: எம்ஜிஆர் நடித்த அரச கட்டளை. அந்த காலத்திலே எம்ஜிஆர் இப்போது என்ன நடக்கிறதோ, அதை அப்போதே படமாக எடுத்து நடித்தார்.

கேள்வி: இப்போது நீங்க படம் பார்ப்பது இல்லையா?

பதில்: நான் திரையரங்கிற்குச் சென்று 20 வருடங்கள் ஆகிவிட்டது.

கேள்வி: 1974ல் பொறுப்பேற்கும்போது முதலமைச்சர் ஆவோம் என்று நினைத்தீர்களா ?

பதில்: நான் என்றுமே நினைக்கவில்லை. கிளைச்செயலாளராக பணியைத் தொடங்கினோம். இறைவன் படிப்படியாக கொடுத்திருக்கிறார்.

கேள்வி: அரசியல்வாதிகளைப் பார்த்தாலே பயப்படனும்னு தோணுது?

பதில்: எங்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. பயந்து கொண்டா பேசிகிட்டு இருக்கீங்க?

கேள்வி: அனைவரும் சட்டையில் அந்த புகைப்படம் வைத்துள்ளீர்கள்?

பதில்: இப்பவும் வைத்துள்ளோம். தலைவருக்கு பிறகு அம்மாதான் இந்த இயக்கத்திற்கு. எங்களுடைய தலைவருக்கு கொடுக்கும் மரியாதையைப் போல அவர் வழியில் செயல்பட வேண்டும் என்று இந்த புகைப்படமே எங்களுக்கு வலிமையை கொடுக்கும்.

கேள்வி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உங்களைப் பற்றி பேசிய வீடியோ எப்போதாவது போட்டு பார்ப்பீர்களா?

பதில்: மனதுக்குள்ளே இருக்கிறது. எதற்கு போட்டு பார்க்க வேண்டும்.

கேள்வி: பழனிசாமி என்பவர் எடப்பாடியார் என்று மாறியது பற்றி?

பதில்: நான் பழனிசாமி என்றுதான் இருந்தேன். அம்மாதான் எடப்பாடியார் என்று கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார். விரைவில் எடப்பாடி பழனிசாமியின் முழு வீடியோ வெளியாக உள்ளது. அதில் அவர் மேலும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு சசிகலா – ஓ.பன்னீர்செல்வத்தின் மோதலுக்கு மத்தியில் கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வானார்.

தீவிர பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி:

அவர் முதலமைச்சர் பதவியேற்பார் என்று யாருமே எதிர்பார்க்காத சூழலில், முதலமைச்சர் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் வெற்றிகரமாக எஞ்சிய ஆட்சியை நிறைவு செய்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருடனான போட்டிக்கு மத்தியில் கட்சியையும் கைப்பற்றி தற்போது பொதுச்செயலாளராக உள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும், கூட்டணியில் பாமக, தேமுதிக-வை உள்ளே கொண்டு வரவும் தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆளுங்கட்சி திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட பெரிய தேர்தல்களான சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், வரும் தேர்தல் அவருக்கு மிக மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

Related Post

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

Posted by - February 24, 2026 0
ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ். கட்சி விதியை…

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்,…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - December 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *