Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

146 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12,264 பேரில், 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேரில், 1171 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 7,998 பேரில், 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் வீட்டின் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். டெங்கு பரவாமல் இருக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Post

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

Posted by - November 1, 2024 0
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *