சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!

196 0

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன். முன்னதாக வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க இருந்து பின் தனுஷ் இப்படத்தில் நடித்தார். ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்குப் பின் தற்போது வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் அரசன் படம் உருவாக .இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோ இன்று சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசன் பட ப்ரோமோ

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக இருக்கும் அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிமாறன் மற்றும் அனிருத் கூட்டணி இணைவது இதுவே முதல் முறை. இந்த ப்ரோமோ வீடியோவில் இயக்குநர் நெல்சனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரே இரவில் மூன்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதியாக வருகிறார் சிம்பு. அரசியல் , காமெடி, ரத்தம் தெறிக்கும் வன்முறை என தனது  தனித்துவமான நடையில் இந்த ப்ரோமோவை எடுத்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் படங்களைப் போல் இந்த ப்ரோமோவிலேயே சில டப்பிங் சிக்கல்கள் இருக்கின்றன . இடையில் தனுஷின் ரெஃபரன்ஸூம் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் கைதட்டல்களை பெறுகிறது. வடசென்னைக்கு சந்தோஷ் நாராயணன் மிக சிறப்பாக இசையமைத்திருந்தார். இந்த ஒட்டுமொத்த ப்ரோமோவில் அனிருத்தின் பின்னணி இசை கொஞ்சம் சுமாராக தெரிந்தாலும் ப்ரோமோவை வைத்து முழுவதுமாக மதிப்பிடுவது கடினம். மற்றபடி சிம்பு ரசிகர்களுக்கும் சரி வெற்றிமாறன் ரசிகர்களையும் திருபதி படுத்தும் விதமாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது. திரையரங்கில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் விசில் பறக்கின்றன.  யூடியுப் தளத்தில் இந்த ப்ரோமோ  இருக்கிறது.

 

 

 

Related Post

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம்

Posted by - September 16, 2025 0
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.…

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

Posted by - December 30, 2023 0
விஜயகாந்த் – வடிவேலு மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை…

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

Posted by - March 18, 2023 0
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *