ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

160 0

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. வெற்றி இலக்கை கடைசி வரை மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா  2-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியானது நடந்து வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கடைசி வரை போராடி தோற்றது. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து களம் கண்ட விராட் கோலி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் தென்னாப்பிரிக்கா  பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. அதுமட்டுமல்லாமல் இருவரும் சதமடித்தனர். ருத்துராஜ் 105 ரன்களிலும், விராட் கோலி 102 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர் களம் கண்ட கேப்டன் கே.எல்.ராகுல் 66 ரன்கள் குவித்தார். இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பந்து வீச்சில் அதிகப்பட்சமாக மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரம் 108 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தெம்பா பவுமா 46 ரன்களிலும், மேத்யூ பிரீத்கே 68 ரன்களிலும், டெவால்ட் பிரேவிஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த வீரர்களின் பங்களிப்பு தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்தது. அந்த அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக பிரசித் கிருஷ்ணா, அர்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

Related Post

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

Posted by - April 20, 2023 0
அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின்…

ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..

Posted by - June 4, 2025 0
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *