பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.. அனுமதியுடன் சொல்கிறேன்.. பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!

215 0

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  “பிரபாகரன் பற்றிய ஒரு உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலும் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுதும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும் – ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறிய பழ.நெடுமாறன், “தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் கால் ஊன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்று பட்டு நின்று பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன்” என்று கூறினார்.

Related Post

’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?

Posted by - April 2, 2025 0
நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் பேசுவார்- கைலாசா. பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத்…

வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Posted by - February 13, 2025 0
சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன. ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். 1995ஆம் ஆண்டு முதல்…

பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதா..? இந்த விஷயங்களை தவிர்த்தால் சரியாயிடும்..!

Posted by - December 3, 2022 0
பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.…

பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை

Posted by - February 17, 2023 0
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *