‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

72 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

வெவ்​வேறு இடங்​களில்… இந்த நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கம் சார்​பில் சென்​னை​யில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.

கல்​வித் துறை தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கம், சேப்​பாக்​கம் எழில​கம், கடற்​கரை சாலை​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் என வெவ்​வேறு இடங்​களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

17-வது நாளான நேற்று முன்​தினம் (ஞா​யிறு) மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில் 18-வது நாளான நேற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணி​யாக சென்று போராட்​டம் நடத்​தினர்.

‘சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும், திமுக அரசே! தேர்​தல் வாக்​குறு​தியை நிறை வேற்​று, ஊதிய உயர்வு கேட்​க​வில்​லை, உரிய ஊதி​யம்​தான் கேட்​கிறோம்’ என்று அவர்​கள் கோஷம் எழுப்​பினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்டனர்​.

Related Post

+2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் – அட்டவணை

Posted by - May 8, 2025 0
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி…

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

ஆட்சி மாற்றம் ஏற்படும்… தங்கம் விலை உச்சத்தை தொடும்… புதிய நோய் பரவும்… பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்,….

Posted by - April 15, 2025 0
மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும்…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *