‘காடுவெட்டி’ பட பெயர் சென்சாரில் தப்பியது எப்படி? – தயாரிப்பாளர் சோலை ஆறுமுகம் சொன்ன காரணம்

159 0

காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம்.

சோலை ஆறுமுகம் இயக்கத்தில், ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி படம் தயாராகியுள்ளது. காடுவெட்டி என்றால், பாமகவின் முதன்மை தலைவர்களில் ஒருவரான மறைந்த காடுவெட்டி குருதான் நினைவுக்கு வருவார். இதில் சங்கீர்த்தனா, விஷ்மியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்காடுவெட்டி படத்தை சென்சாருக்கு திரையிட்ட போது, காடுவெட்டி பெயருக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி செய்ய, காடுகளில் உள்ள மரங்களைவெட்டி சமன்படுத்தி, அதில் பயிற்சி மேற்கொள்வார்கள். பிறகு அது விளைநிலமாக மாற்றப்படும். அத்தகையை இடங்களை காடுவெட்டி என்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி 11 இடங்கள் உள்ளன. ஆக, காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம்.ஆனாலும், படத்தில் வரும் வசனங்கள், காட்சிகளுக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடைசியில் 31 இடங்களில் கத்திரிப்போட்டு  சான்றிதழ் வழங்கியுள்ளது. காதலை முன்வைத்து அனைவரையும் ஒழிக்க நினைத்தால் அந்த வன்முறை தலைமுறைகளாகத் தொடரும் என்ற கருத்தின் பின்னணியில் காடுவெட்டியை எடுத்துள்ளதாக சோலை ஆறுமுகம் கூறியுள்ளார்.மோகன் ஜி வழியில், சில அரசியல்வாதிகள் சொல்லும் நாடகக் காதலுக்கு வலுசேர்க்கும் வகையில் காடுவெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதன் ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

Related Post

Parasakthi:முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?

Posted by - January 10, 2026 0
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில்…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *