நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே – அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை

67 0

அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.

முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Post

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023 0
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு…

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *