நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

139 0

அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன.

SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SIR-ஐப் புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

போலி, மோசடி வாக்காளர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் நோக்கில், SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. எனினும் இது எதிர்க் கட்சிகளின் வாக்குகளைத் திட்டமிட்டு பறிக்கும் முயற்சி என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், SIR பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களாக ஈடுபட்டு வருகின்றனர். SIR படிவங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து, அவற்றை நிரப்பி பெறும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு

வழக்கமான அலுவல்களுக்கு மத்தியில் இந்தப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

உரிய திட்டமிடல், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாலும், நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் SIR பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாலும் தங்ககளுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.

Related Post

நான் முதலமைச்சரானால்! #விஜய்

Posted by - February 23, 2026 0
2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

திமுகவை சுத்து போட்டு விளாசி விஜய் ஆவேச பேச்சு

Posted by - February 23, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டி என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். TVK Vijay Speech Vellore: தன் மீது…

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - February 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *