எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

73 0

தவெக தலைவர் விஜய் தனது திருச்சி கிழக்கு தேர்தல் பரப்புரையின் போது தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தார்.

தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று மேற்க்கொண்ட தேர்தல் பரப்புரையில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தது கவனம் பெற்றது.

விஜய் தேர்தல் பரப்புரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21- ஆம் தேதி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) ரோடு ஷோ சென்றவாறு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்குச் சேகரித்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் கூடி விஜய்க்கு பரிசுகள் வழங்கியும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சர்ச் மற்றும் தர்காவில் வழிபாடு:

அப்போது வயர்லெஸ் சாலையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் விஜய் முட்டிப்போட்டு நடந்து பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு பின்னர் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினர், பின்னர் தேவாலய பங்குத்தந்தையிடம் ஆசி வாங்கிவிட்டு தனது வாகனப்பரப்புரையை தொடர்ந்தார்.

சிறிது தூரம் சென்ற பின் விஜய் அங்குள்ள தர்காவிற்கு சென்று ஆசி பெற்றார். பின்னர் கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்க்கொண்டார்தனது கட்சி எவ்வித மதவாதத்திற்கும் எதிரானது என்பதையும், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய “மதச்சார்பற்ற” கட்சி என்பதையும் வெளிப்படுத்த விஜய் விரும்புவதாக தவெகவினர் தெரிவித்து வருகின்றனர்

Related Post

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

ஈபிஎஸ் உடன் தங்கமணி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்

Posted by - August 25, 2025 0
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார் அதிமுக…

அதிமுகவில் இணைந்தது ஏன்?

Posted by - March 13, 2026 0
அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு! நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *