கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

293 0

தென்காசி:

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.

இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன.குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டன - Seithi Saral

இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு. தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.

இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.

இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும். கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.

இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது. இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Related Post

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

Posted by - May 10, 2024 0
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *