வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

207 0

சியோல்:

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின் பேரில் ஐ.சி.பி.எம். வகையை சேர்ந்த ஹவாகாய்-15 என்ற ஏவுகணையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய - அமெரிக்க ராணுவப் பயிற்சிக்கு  பதிலடி மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 5,770 கிலோமீட்டர் உயரத்தில் 990 கி.மீட்டர் தொலைவில் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கியது. தனது அணு ஆயுத சோதனைக்கு இது மேலும் வலு சேர்ப்பதாக அமைந்ததாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென் கொரியா கூறி உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 48 மணி நேரங்களில் அடுத்தடுத்து வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்

Posted by - April 15, 2023 0
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Posted by - September 6, 2023 0
டோக்கியோ: இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை…

”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

Posted by - March 6, 2025 0
காஷ்மீரில் நிலவிய பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட காஷ்மீரின் பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் எனவும், வெளியுறவு…

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

Posted by - December 10, 2022 0
முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா,…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *