ஓபிஎஸ் தாயார் ஓ.பழனியம்மாள் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

210 0

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து தேனி சென்றார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது தாயாரின் முகம் பார்த்தும் காலை பிடித்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர்,  “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Related Post

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - December 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

Posted by - December 19, 2022 0
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

பொதுச்செயலாளரான எடப்பாடி… இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

Posted by - March 29, 2023 0
பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென்…

2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Posted by - December 31, 2025 0
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை…

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை… ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்!

Posted by - February 20, 2024 0
கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *