பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

411 0

பெங்களூரு:

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு பெண்ணை கொலை செய்து அவரது உடலை பாலிதீன் கவரால் மூடி வைத்திருந்தனர். இந்த சம்பவம் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ரயில் நிலையத்திலிருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம்: 3வது  முறையாகத் தொடரும் சம்பவம்! - லங்காசிறி நியூஸ்

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், ரெயில் நிலையத்தின் முன்பாக டிரம்மை வீசி சென்றது ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்த தமன்னா (வயது 27) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய ரெயில்வே போலீசார், தமன்னா கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த கமால் (21), தன்வீர் (28), ஷாகீப் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தமன்னா அப்ரோஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அப்ரோஜ் மாற்றுத்திறனாளி ஆவார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.

அத்துடன் அப்ரோஜிடம் இருந்து தமன்னா விவாகரத்தும் பெற்றிருந்தார். அதன்பிறகு, அப்ரோஜின் பெரியப்பா மகனான இந்திகாப்பை தமன்னா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார். தனது 2-வது கணவருடன் தமன்னா ஜிகனியில் வசித்து வந்தார். அப்ரோஜின் சகோதரர் நவாப் பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.

தனது சகோதரரை விவாகரத்து செய்து விட்டு, இந்திகாப்பை தமன்னா 2-வதாக திருமணம் செய்ததால் நவாப் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் தமன்னாவை பழிவாங்க நவாப் திட்டமிட்டார். இதற்காக கடந்த 12-ந் தேதி விருந்து கொடுப்பதாக நவாப் மற்றும் உறவினர்கள் தமன்னாவை அழைத்து சென்று கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தனர்.

பின்னர் தமன்னாவின் உடலை பாலிதீன் கவரில் சுற்றி டிரம்மில் பீகாருக்கு கொண்டு செல்ல கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்து நுழைவு வாயிலில் வைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் நவாப் உள்பட மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தமன்னா உடல் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில் பெயர் மற்றும் முகவரியும் இடம் பெற்றிருந்தது. அந்த ஸ்டிக்கர் மற்றும் பிற முகவரி மூலமாக போலீசார் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்துள்ளனர். துரிதமாக துப்பு துலக்கிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Post

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி செலுத்துவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு: பண்ணையாளர்கள்-வியாபாரிகள் அறிவிப்பு

Posted by - August 15, 2023 0
திருவனந்தபுரம்: பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால்…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Posted by - December 20, 2023 0
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *