மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்

239 0

புதுடெல்லி :

ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம் | India ranks  126th in the list of happiest countries

மேலும், சமூக ஆதரவு, வருவாய், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய 6 முக்கிய காரணிகளும் கணக்கில்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு மூன்றாண்டு காலத்தில் திரட்டப்பட்ட தகவல்களில் சராசரி அடிப்படையில் மகிழ்ச்சி மதிப்பெண் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் 146 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடமே கிடைத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு நம் நாடு பெற்ற 136-வது இடத்துடன் ஒப்பிடும்போது இது 10 இடங்கள் முன்னேற்றம் என்றபோதும், பிரச்சினைகளில் தவிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (108-வது இடம்), இலங்கையைவிட (112) பின்தங்கியே உள்ளது.

இந்நிலையில், உலகின் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தவறாக 126-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 48-வது இடம்தான் இந்தியாவுக்கு சரியானதாக இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மனநிலை சார்ந்த விஷயமான மகிழ்ச்சியை வரையறுப்பது கடினம்.

இந்நிலையில், உலகம் முழுவதும் ஒரே கண்ணாடியைக் கொண்டு மகிழ்ச்சியை அளவிடுவதும், எல்லா நாட்டு ஆண்கள், பெண்களும் ஒரு மாதிரியாகவும், ஒரு விஷயத்தில் ஒரே அளவிலும்தான் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கணக்கிடுவதும் சரியாக இருக்காது.

உலகின் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மையை பரிணாமம் வழங்கியுள்ளது. மனிதனின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமான, குடும்பத்தினர், நண்பர்கள் என்ற சமூக உறவுகளில், உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா முன்னணியில் இருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Post

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *