கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

269 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது.

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுவனொருவரின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வேறொரு சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.successful heart transplant surgery at Sri Padmavathi children's heart  center | திருப்பதியில் ஐந்தரை வயது சிறுமிக்கு வெற்றிகரமாக இதய மாற்று  சிகிச்சை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அங்கு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை நேற்று மாலை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.successful heart transplant surgery at Sri Padmavathi children's heart  center | திருப்பதியில் ஐந்தரை வயது சிறுமிக்கு வெற்றிகரமாக இதய மாற்று  சிகிச்சை

பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இதயத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு பொறுத்தினர் மருத்துவர்கள்.

இதயத்தை கொண்டு சென்றபோது மழையும் வந்துவிட்டதால், மருத்துவ பணியாளர்களுக்கு அவ்விடத்தில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக கொட்டும் மழையில் ஓடோடி வந்து இதயத்தை மருத்துவர்கள் வசம் அவர்கள் ஒப்படைத்தனர்.

இக்காட்சிகள், அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது. அச்சிறுமி, தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள திருப்பதி மாவட்டம் தடா மண்டலம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமியென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன?

Posted by - June 19, 2023 0
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி…

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

Posted by - August 24, 2023 0
புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

நாளை சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்

Posted by - July 1, 2023 0
புதுடெல்லி: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன்…

Smart TV வாங்கணுமா? 2025-ல் மக்கள் ஏன் மாறி மாறி வாங்குறாங்க… இதுதான் முக்கிய காரணங்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025 ஆரம்பிச்ச அதே நிமிஷத்துல இந்திய சந்தையில் Smart TV விற்பனை ரொம்ப வேகமா போய்கிட்டே இருக்கு. மக்கள் ஏன் தொடர்ச்சியா Smart TV-களுக்கு மாறிக்கிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *