இதனால் தான் அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் தாமதமாகிறதா? வெளியான காரணம்

344 0

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 பட அப்டேட் தாமதமாவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் துணிவு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், தான் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனை அவர்கள் மாற்ற சொன்னதாகவும் பேசியிருந்தார். இருப்பினும் அஜித் தரப்பில் அவருக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும் பேசியிருந்தார்.

 

மேலும் விக்னேஷ் சிவன் தான் நினைப்பதிலிருந்து மாற மாட்டார் என்றும் அதனால் கதையில் மாற்ற செய்ய சொன்னதால் விலகியதாகவும் குறிப்பட்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏகே 62 ஸ்கிரிப்டை நிறைவு செய்யும் பணியில் மகிழ் திருமேனி ஈடுபட்டுவருகிறாராம். விக்னேஷ் சிவன் விஷயத்தில் நடந்த தவறு இந்த முறை நடக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனம் பொறுமையாக அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Related Post

வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா.. ஏன் தெரியுமா?

Posted by - March 19, 2025 0
 வடிவேலு இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலர் மறந்துவிட்டார்கள். நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - August 15, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத்…

நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - April 14, 2025 0
நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஶ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான…

Video: விஜய்யின் ‘லியோ’ பட ‘நா ரெடி’ பாடல் வெளியீடு!

Posted by - June 22, 2023 0
நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *