கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

333 0

சிம்லா :

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:-

சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன. கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது. நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.கொரோனாவுக்கு பின் மாரடைப்பு அதிகரிப்பு? மாநிலம் முழுதும் ஆய்வு நடத்த  திட்டம்| Increase in heart attacks after Corona? A state-wide survey is  planned | Dinamalar

இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.

முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் ‘டிரெட்மில்’ சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.

இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. மது அருந்துவதை குறைக்கவேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!

Posted by - July 17, 2025 0
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது என ஜோதிமணி கடுமையாக சாடினார். திமுக எம்.பி திருச்சி சிவா…

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *