யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

350 0

சூப்பர்ஸ்டார் யார்

கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது என்பது போல் பேச துவங்கிவிட்டனர்.

 

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில் | Vijay Speech About Superstar Title Issue

அண்மையில் நடந்த ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் கூட ‘சூப்பர்ஸ்டார் பட்டம் என்றைக்குமே தொல்லை தான்’ என ரஜினிகாந்த் கூறியிருந்தார். சூப்பர்ஸ்டார் யார் என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், இதுகுறித்து தளபதி விஜய் பேசியுள்ள சில விஷயங்கள் தற்போது விஜய் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

 

விஜய் தொலைக்காட்சியில் ஒரு முறை விஜய்க்கு விருது வழங்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளினி டிடி ‘உங்களுக்கு தளபதி விஜய்யாக இருக்க பிடித்திருக்கிறதா அல்லது அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க பிடித்திருக்கிறதா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விஜய் ‘நான் என்றும் பழசை மறக்க மாட்டேன். எனக்கு முதன் முதலில் மக்கள் கொடுத்த பட்டம் தளபதி. அதனால் அதிலிருந்து நான் போக மாட்டேன்’ என கூறினார்.

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில் | Vijay Speech About Superstar Title Issue

பின் ரசிகர்களுடன் ஏற்பட்ட லைவ் கலந்துரையாடலில் இதுகுறித்து பேசிய விஜய் ‘என்றும் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான், அவர் தலைவர் மட்டும் தான்’ என கூறினார்.

இதன்பின் தொலைக்காட்சி நேரலையில் இதைப்பற்றி கேள்வி எழுந்தபோது ‘என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த துறையிலும் ஒருவர் என்ட்ரியாகும் போது, அந்த துறையில் நம்பர் 1 ஆகவேண்டும் என்று தான் நினைப்பார்கள். அது இயல்புதான். ஆனால், என்றைக்குமே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்’ என கூறியிருக்கிறார்.

இப்படி பல இடங்களில் ரஜினிகாந்த் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் என விஜய் குறிப்பிட்டுள்ளதை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Post

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொடங்கவிட்ட விஷால்

Posted by - January 27, 2025 0
இயக்குனர் மிஷ்கினுக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது. இளையராஜா குறித்து கொச்சையாக பேசிய…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

Posted by - November 29, 2022 0
நடிகை மீனா நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த…

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது தான்.. திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி

Posted by - June 27, 2023 0
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *