கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி…?

265 0

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி...?  | How Odisha Train Accident Happened 3 Trains Collided Within Minutes

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார். ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.சென்னைக்கு வந்த விரைவு ரயில் விபத்து... பிரதமர் மோடி, ராகுல் காந்தி  இரங்கல்...

சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன. அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன. மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

இன்று வெளியாகும் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ.. விலை, கிரே மார்க்கெட் விலை இதுதான்..

Posted by - August 2, 2024 0
இன்று Ola Electric Mobility Limited இன் பங்குகள் கிரே மார்க்கெட் ரூ.17 பிரீமியத்தில் கிடைக்கின்றன என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன் ஐபிஓ விலை, மார்க்கெட்…

இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்… இந்தியாவில் காண முடியுமா?

Posted by - January 5, 2024 0
இந்தூர்: சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே…

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Posted by - June 10, 2023 0
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *