டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

297 0

புதுடெல்லி:

டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (வயது 8), ஆர்த்தி (வயது 6) ஆகிய இருவரும் நேற்று மதியம் பெற்றோருடன் சாப்பிட்டுள்ளனர்.டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை | 2  Children Found Dead Inside Wooden Box In Delhi House

பின்னர் 3.30 மணியளவில் காணாமல் போயிவிட்டனர். வீட்டில் உள்ளவர்கள் நீண்டநேரமாக தேடியும் தகவல் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர். இதுபற்றி ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. குழந்தைகளின் உடலில் காயம் ஏதும் இல்லை என்றும், தற்செயலாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Related Post

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - January 6, 2025 0
முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *