“10 படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லோகேஷ் கனகராஜ்

273 0

முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ்.

20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க எனக்கு ஆசை இல்லை. 10 படங்கள் எடுத்துவிட்டு சினிமாவிலிருந்து வெளியேறிவிடுவேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராக சாதித்தவர்களில் மிக முக்கியமான பெயராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். 2017ம் ஆண்டு சந்தீப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அடுத்த திரைப்படமான கைதியில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றிக் காட்டினார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராகவும் முன்னேறினார் லோகேஷ்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். கட்சிப் பணிகளால் நான்கு ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த கமலால் இனி ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்விகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முதல் 400 கோடி வர்த்தகமான திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் திரைப்படம் படைக்க காரணமாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஐடியா இல்லை என்றும் பத்து படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - January 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்

Posted by - August 17, 2023 0
ரஜினியின் ஜெயிலர் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார்,…

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - April 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

சித்தார்த் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

Posted by - May 21, 2024 0
சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சித்தார்த் நடிக்கவுள்ள அவரது 40 ஆவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *