டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

215 0

டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை காரில் அவர் புறப்பட்டார். பிரகதி மைதான சுரங்கப்பாதை பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தது.டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை | Two  arrested - Police investigation Robbery incident in Delhi

அப்போது அந்த காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பின் தொடர்ந்தது. கார் வளைவில் திரும்பும்போது அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை முன்னாள் நிறுத்தி வழிமறித்தது. 2 மோட்டார் சைக்கிளிலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அதில் 2 பேர் காரை நெருங்கி அதில் இருந்த சஜன்குமார் மற்றும் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போய் இருந்தது பின்னர் தெரிய வந்தது. சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக திலக் மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற நபர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை சுற்றி வளைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவை ராஜினாமா செய்யக் கோரினார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும்.

டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒருவரை வழி செய்யுங்கள். மத்திய அரசால் டெல்லியை பாதுகாப்பாக மாற்ற முடியவில்லை என்றால், அதை எங்களிடம் ஒப்படையுங்கள். ஒரு நகரத்தை அதன் குடிமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுவது என்று நாங்கள் உங்களுக்கு காட்டுவோம்” என்று ட்வீட் செய்தார்.

 

Related Post

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?

Posted by - April 7, 2025 0
இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால்…

பெங்களூருவில் திருமணத்துக்கு மறுத்த காதலியை 16 இடங்களில் வெட்டி கொன்ற வாலிபர்

Posted by - March 2, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், கோண சீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நளமதி அப்புலு சவுத்ரி. இவரது மகள் லீலா பவித்ரா (வயது 28). மகளின் படிப்புக்காக…

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து,…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *