நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

222 0

புதுடெல்லி:

வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும், உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதற்கும் இந்த எண் பயன்படுகிறது. அதே சமயத்தில், சில மோசடியாளர்கள், போலி விலைபட்டியல் அளித்து, உள்ளீட்டு வரியை திரும்ப பெற்று, மத்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய போலி ஜி.எஸ்.டி. பதிவுகளை கண்டறிய நாடு முழுவதும் 2 மாத கால ஆய்வு, கடந்த மே 16-ந் தேதி தொடங்கியது. வருகிற 15-ந் தேதி இப்பணி முடிவடைகிறது.GST misappropriation; Rs 3.11 lakh crore embezzled in 5 years, Rs 1.03 lakh  crore recovered | A2Z Taxcorp LLP

இந்நிலையில், ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஷஷாங்க் பிரியா, டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான தேசிய மாநாட்டில் பேசுகையில் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:- 69 ஆயிரத்து 600 ஜி.எஸ்.டி. அடையாள எண்கள், ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், இதுவரை 59 ஆயிரத்து 178 அடையாள எண்கள், கள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்களில், 16 ஆயிரத்து 989 எண்கள் புழக்கத்திலேயே இல்லை. 11 ஆயிரத்து 15 எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 972 போலி ஜி.எஸ்.டி. பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரூ.15 ஆயிரத்து 35 கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது. ரூ.87 கோடி, திரும்ப பெறப்பட்டுள்ளது. . இந்த ஆய்வின் மூலம், ஜி.எஸ்.டி. பதிவிலும், கணக்கு தாக்கலிலும் காணப்படும் ஓட்டைகளை அடைப்பது அவசியம் என்று தெரிய வந்துள்ளது.

வர்த்தகர்கள் மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்ய பயன்படுத்தும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம், வர்த்தகர்களுக்கு உகந்தவகையில் சீர்திருத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 1 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Post

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted by - July 20, 2023 0
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும்…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

Posted by - February 8, 2025 0
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட்…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

Posted by - August 11, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *