ஓணம் லாட்டரியால் அடித்தது அதிர்ஷ்டம்: திருப்பூரை சேர்ந்த 4 பேர் ரூ.25 கோடிக்கு அதிபதியானார்கள்

198 0

திருவனந்தபுரம்:

கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது.அடேங்கப்பா.! "25 கோடி" அதிர்ஷ்டம் யாருக்கு? கேரளாவில் படுஜோராக நடக்கும் ஓணம்  லாட்டரி விற்பனை | Kerala Thiruvonam bumper lottery: 25 Crore prize money,  second prize for 20 ...

இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும். ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் பிற்பகல் வெளியிடப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது.

இந்தநிலையில் நேற்று திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது. அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர். பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

Related Post

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து ..

Posted by - November 30, 2022 0
சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து. தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ரெயில் நிலையத்தில்…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *