இனி ஸ்டைலாக மாட்டி செல்ல முடியாது: வாகன ஓட்டிகள் கழுத்தில் ஹெட்செட் அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

343 0

திருப்பதி:

வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர். மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டி பேசியபடி செல்லும்போது கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.Driving with headphones on could land you up to £5,000 fine and an instant  ban | Express.co.uk

ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அதன்படி இயர் போன், போன் ஹெட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை அதிகமாக விதிக்க வேண்டும்.

இதன்மூலம் விபத்துக்களை குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தனர். போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கார், பைக், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் கழுத்தில் போன் ஹெட்செட், இயர் போன் மாட்டி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ அல்லது கழுத்தில் போன் ஹெட்செட் மாட்டி இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Post

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

ராஜஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

Posted by - June 7, 2023 0
ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *