8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

282 0

கொல்கத்தா :

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி..!!

போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.

அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர். “இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Post

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

பெங்களூருவில் திருமணத்துக்கு மறுத்த காதலியை 16 இடங்களில் வெட்டி கொன்ற வாலிபர்

Posted by - March 2, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், கோண சீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நளமதி அப்புலு சவுத்ரி. இவரது மகள் லீலா பவித்ரா (வயது 28). மகளின் படிப்புக்காக…

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்

Posted by - September 4, 2023 0
பெங்களூரு: பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *