தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

286 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி. குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார். திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார். சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார். எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

“காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர். லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்”. அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம்: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Posted by - September 2, 2023 0
புதுடெல்லி: சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும்…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Posted by - December 12, 2023 0
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *