திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

204 0

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் திருட்டு போயின.

இதுகுறித்து சரண்சிங் செராவத் ஹர்மதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பரத்பூர் பகுதியில் இருந்து 2 எருமை மாடுகளை மீட்டு ஒப்படைத்தனர். அதில் ஒரு எருமை மாடு சில நாட்களில் இறந்து விட்டது. மேலும் இந்த எருமை மாடுகள் திருட்டு தொடர்பாக அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கு சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எருமை மாட்டின் உரிமையாளரான சரண்சிங் செராவத் உள்பட மொத்தம் 21 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று சரண்சிங் செராவத் எருமை மாட்டை ஒரு வாகனத்தில் ஏற்றி கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார். இந்த சம்பவம் கோர்ட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியால் எருமை மாடு அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யபட உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Post

திருப்பதிக்கு போறீங்களா? 99 சதவீதம் பேர் செய்யும் தவறு! பெருமாளே சொல்லியும் பாலோ செய்யாத பக்தர்கள்

Posted by - December 26, 2023 0
திருப்பதி: திருப்பதியில் 99 சதவீத பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted by - August 28, 2024 0
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர்…

நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு.

Posted by - March 7, 2026 0
TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில…

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

Posted by - December 13, 2024 0
Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *