சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

351 0

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின்னர், புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த ‘சந்திரயான்-3’ ஆகஸ்டு 1-ந் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5-ந் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் ‘சந்திரயான்-3’ நுழைந்தது.

அதன்பிறகு, சுற்றுப்பாதையின் உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே ‘சந்திரயான்-3’ கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ந் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் இருந்தபோது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்தன.Chandrayaan-3 releases new image of Moon | சந்திரயான் - 3 விண்கலத்தில்  இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு

இனி உந்துவிசை கலன் தொடர்ந்து நிலவை சுற்றியபடி அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். அதேநேரத்தில், லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தைக் குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, திரவ வாயு எந்திரம் இயக்கத்தின் மூலம், நிலவின் தரையில் இருந்து 113 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கருவி கடந்த 18-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து 2-வது கட்டமாக லேண்டர் கருவியின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக வந்துள்ள லேண்டர், குறைந்தபட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக, 40 நாள் தொடர் பயணத்தின் நிறைவு நிகழ்வான, லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை 5.45 மணிக்கு மேற்கொள்ளப்பட இருந்தது. அதாவது, எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டர் கருவியின் வேகத்தை படிப்படியாக குறைத்து, இறுதியாக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவந்து, மெதுவாக நிலவில் தரையிறக்கப்பட இருக்கிறது.

‘சந்திரயான்-2’ விண்கலம் இந்த இடத்தில்தான் தோல்வி அடைந்தது என்பதால், இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டர் கருவி நிலவில் தடம் பதிக்கச் செல்லும் ஒவ்வொரு நொடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர். இம்முறை லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

லேண்டர் தரையிறங்கிய 2 மணி நேரத்தில், அதிலுள்ள ரோவர் வாகனம் சாய்வுதளம் வழியாக நிலவில் இறங்கி தனது ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், நேற்று இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதாவது, 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அங்குள்ள சூழல், இடர்பாடுகளை கண்டறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை லேண்டர் படம் பிடித்து அனுப்பி உள்ளது. நிலவில் உள்ள சூழல் மற்றும் இடர்பாடுகளை கண்டறிய பொருத்தப்பட்ட கேமரா கடந்த 19ந்தேதி நிலவை புகைப்படம் எடுத்த நிலையில் இன்று மீண்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Post

BSNL-க்கு புயல் வேகம்.. 3 மாதத்துல 36 லட்சம்.. 4ஜி மகிமை.. சிம் கார்டு வாங்கியாச்சா.. குஷியில் கஸ்டமர்கள்!

Posted by - December 20, 2024 0
அங்க அடிச்சா.. இங்க வலிக்கும்.. இந்த டயலாக் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு பக்காவாக பொருந்திவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம்…

போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

Posted by - August 11, 2023 0
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ்…

ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் – ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?

Posted by - November 6, 2025 0
Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரே மாதிரியான ரீசார்ஜ் கட்டணத்தில் முற்றிலும் வித்தியாசமான பலன்களை வழங்குவது குறித்து…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Posted by - March 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 700-ஐ தாண்டியிருந்தது. நேற்று ஒரே நாளில் 754 பேருக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *